சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இன்று காலை நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் உக்ரைனின் ஒலெக்செண்டர் யுசேக் (Oleksandr Usyk) வெற்றிபெற்று உலக ஹெவிவெயிட் சாம்பியனானார்.
37 வயது யுசேக், பிரிட்டனின் டைசன் ப்யூரியை (Tyson Fury) தோற்கடித்தார்.
முக்கிய குத்துச்சண்டை போட்டிகளான WBA, IBF, WBO ஹெவிவெயிட் சாம்பியனான யுசேக், தற்போது ப்யூரியின் WBC பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இப்படி, குத்துச்சண்டை போட்டிகளின் முக்கிய ஹெவிவெயிட் சம்பியன் பட்டங்களை, இதற்கு முன்னர் 2000 ஆண்டில் லெனக்ஸ் லுவிஸ் (Lennox Lewis) கைப்பற்றினார். அதன் பிறகு இப்போது யுசேக் 4 உலகக் குத்துச் சண்டைப் பட்டங்கைளைக் கைப்பற்றி சாதனை புரிந்திருக்கிறார்.
இன்றைய போட்டியின் நடுப்பகுதியில் தடுமாறிய யுசேக், எட்டாவது சுற்றில் ஆட்டத்தைத் தமது பக்கம் திருப்பினார்.
This ringside view when Usyk ROCKED Fury and changed the direction of the entire fight! 😱#FuryUsyk | #RingOfFire | LIVE on TNT Sports Box Office pic.twitter.com/V3BeYxRdGz
— Boxing on TNT Sports (@boxingontnt) May 19, 2024
அவரது பலமான தாக்குதல்களைத் தொடர்ந்து ஒன்பதாவது சுற்றில் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.
ப்யூரி மறுபோட்டிக்கு அழைப்பு விடுத்தார். யுசேக் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.