இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது வவுனியாவில் நடைபெற்று வருகிறது. மதிய போசன இடைவெளியின் பின்னர் கூட்டம் ஆரம்பமாகி, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது.
காலையில் கூட்டம் ஆரம்பித்த பின்னர், கட்சி மீதான வழக்கு விவகாரங்கள் ஆராயப்பட்டது.
இதன்போது, கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா வழக்கத்தை மீறி, சுமந்திரன் மீது குற்றம்சாட்டி கடும்தொனியில் பேசியுள்ளார். கட்சியின் தற்போதைய சிக்கலான நிலைமைக்கு சுமந்திரனே காரணமென குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய முழுமையான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.