லக்னோ அணியின் கப்டன் கேஎல் ராகுலுடன் மைதானத்திலேயே அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபமாக விவாதம் நடத்தியது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்ததோடு, பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 போட்டியில் லக்னோ அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 சீசன்களாக பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறி வந்த லக்னோ அணி, இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தது. இதற்காக புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரை கொண்டு வந்தது. ஆனால் லக்னோ அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கப்டன் கேஎல் ராகுலுடன் கோபமாக பேசினார். ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியை சகித்து கொள்ள முடியாமல் 100 கமராக்களுக்கு முன்பாகவே கேஎல் ராகுல் காட்டமாக திட்ட தொடங்கினார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் கப்டன் கேஎல் ராகுல் திணறியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த உரிமையாளரும் எந்த கப்டனையும் களத்திலேயே திட்டியதில்லை.
This is just pathetic from @LucknowIPL owner
Never saw SRH management with players on the field or even closer to dressing room irrespective of so many bad seasons and still face lot of wrath for getting involved. Just look at this @klrahul leave this shit next year #SRHvsLSG pic.twitter.com/6NlAvHMCjJ— SRI (@srikant5333) May 8, 2024
தற்போது சஞ்சீவ் கோயங்கா எல்லை மீறி இருக்கிறார். ஏற்கனவே 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு ஆர்பிஎஸ்ஜி அணியை சஞ்சீவ் கோயங்கா வாங்கி இருந்தார். அப்போது 2016 சீசனில் புனே அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் நிறைவு செய்தது. இதன் காரணமாக 2017 சீசனில் புனே அணியின் கப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்பட்டார்.
அப்போதே சஞ்சீவ் கோயங்கா மற்றும் ஹர்ஷ் கோயங்கா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஐபிஎல் தொடரை விளையாட்டாக பார்க்காமல், தொழிலாக பார்ப்பதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இருப்பினும் தோனி வீரராக விளையாடி பதிலடி கொடுத்தார். தற்போது லக்னோ அணியின் கப்டனாக கேஎல் ராகுல், தோனியை போன்றே அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.