யாழ்ப்பாணத்தில் ஒருவர் வெயில் சுட்டு உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 45 வயதான சிவஞானம் ஜெயக்குமார் என்பவரே நேற்று (8) இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர், நேற்று மனைவியின் தந்தையின் நினைவு நிகழ்வுக்கு சென்றுள்ளனர். மதியம் 1.30 அளவில் கசிப்பு அருந்தி விட்டு வீடு திரும்பியவர், வீட்டு வளவில் சிறுநீர் கழிக்க சென்ற போது, மல்லாக்காக விழுந்து விட்டார்.
அதிக போதையில் இருந்ததால் அவரால் எழ முடியவில்லை. சூரிய ஒளி அவரில் நேரில் பட்டுக் கொண்டிருந்துள்ளது. அதிக வெப்பத்தல் ஹீற் ஸ்ரோக் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
மாலை 4.30 மணியளவில் பிள்ளைகள் வீடு திரும்பிய போது, தந்தை நிலத்தில் விழுந்திருந்ததை அவதானித்து, அவரை தூக்க முயன்ற போது உடல் அனலாக தகித்ததாகவும், அவரது தோல்கள் உரிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
அவரது உடல் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. மதுபோதையால் எழ முடியாமல் இருந்தவர், அதிக வெப்பத்தால் ஹீட் ஸ்ரோக் ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அவரது உடலில் 10 வரையான எரிகாயங்களும் காணப்பட்டன.