500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதை இலங்கைக்கு கடத்திக் கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய களியாட்ட விடுதி நடனமாடும் பெண்ணே தனது சூட்கேஸில் போதைப்பொருளை மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
05 கிலோ 278 கிராம் எடையுடைய பேதைப்பொருள் 36 தனித்தனி பொதியில் அடைக்கப்பட்டிருந்தது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் FD-140 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நேற்று (8) இரவு 10.40 மணியளவில் விமான நிலையத்தில் அவர் உருட்டிக் கொண்டு வந்த பயணப்பொதிகளில் சந்தேகம் ஏற்பட்டு சேதனையிட்ட போது, அவர் சிக்கினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1