25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி

விதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக
இன்று (09) வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசந்துறை வீதி சத்திரச் சந்தி வரை வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றது.

வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல் பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றன.

குறித்த செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து பொலிஸார், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment