முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இங்கிலாந்து, இலங்கை இராஜதந்திரி அல்லது வேறு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெறுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1