தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி, ஆங்கிலம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் மே 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் வளாகத்தில் இந்த நேர்காணல்கள் இடம்பெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1