காதலியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 22ஆம் திகதி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வீட்டுக்கு நண்பருடன் சென்றதாகவும், தற்போது அவர் காணாமல் போயுள்ளதாகவும் இளைஞனின் சகோதரர் கூறுகிறார்.
குளியாபிட்டிய, கபலேவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்பவரே காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞன் கடந்த 22ஆம் திகதி “சிங்கிதி” என அழைக்கப்படும் நபரின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் சிங்கிதி மற்றும் குடியிருப்பாளர்களையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போன இளைஞருடன் கடந்த 22ஆம் திகதி அங்கு சென்ற மற்றைய இளைஞன், வீட்டுக்கு அருகாமையில் தங்கியிருந்தபோது, சுசித தனது தோழி சிங்கிதியின் வீட்டுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
எனினும், வெகு நேரமாகியும் நண்பர் வராததால், அவரதுது தொலைபேசிக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும், அது வேலை செய்யவில்லை என நண்பர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது குறித்த இளைஞன் சென்ற வீட்டிலிருந்து இரு வாகனங்களில் அதிவேகமாக வீட்டை விட்டு வெளியேறிய வீட்டு உரிமையாளர்களை அயலவர்கள் பார்த்துள்ளனர்.
இருப்பினும், சிங்கிதி பின்னர் சுசிதவின் நண்பருக்கு போன் செய்து சுசித கொல்லப்பட்டதாக கூறினார்.
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.