25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
ஆன்மிகம்

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4-ம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

மேஷம்

அஸ்வினி: இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும்.

பரணி: இந்த வருடம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வருடம் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும்.

பரிகாரம்: தினமும் விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – செவ்வாய் – குரு | எண்கள்: 1 – 3 – 6 – 9

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும்.

ரோகிணி: இந்த வருடம் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.

மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வருடம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்கி வர பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்ரன் – செவ்வாய் | எண்கள்: 2, 6, 9

மிதுனம்

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வருடம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும்.

திருவாதிரை: இந்த வருடம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சுக்ரன் – சனி | எண்கள்: 3, 5, 7

கடகம்

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த வருடம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

பூசம்: இந்த வருடம் குடும்பத்தில் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.

ஆயில்யம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் அம்மனை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன் – சுக்கிரன் – குரு | எண்கள்: 2, 3, 6

சிம்மம்

மகம்: இந்த வருடம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பூரம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் தனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் – குரு – செவ்வாய் | எண்கள்: 1, 3, 9

கன்னி

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அஸ்தம்: இந்த வருடம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் – சனி – சுக்ரன் | எண்கள்: 5, 6, 8 |

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வருடம் வேலைப் பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும்.

சுவாதி: இந்த வருடம் மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஓர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வருடம் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன் – சனி – புதன் | எண்கள்: 4, 6, 9

விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அனுஷம்: இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

கேட்டை: இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நலபாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் – குரு – சந்திரன் | எண்கள்: 4, 5, 7

தனுசு

மூலம்: இந்த வருடம் பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பூராடம்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஓர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வருடம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மனநிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு – செவ்வாய் – சூரியன் | எண்கள்: 1, 3, 5

மகரம்

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவோணம்: இந்த வருடம் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – சுக்ரன் – புதன் | எண்கள்: 6, 7, 9

கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும்.

சதயம்: இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – புதன் – சுக்கிரன் | எண்கள்: 5, 6

மீனம்

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வருடம் பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.

உத்திரட்டாதி: இந்த வருடம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும் பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரேவதி: இந்த வருடம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு – சந்திரன் – செவ்வாய் | எண்கள்: 1, 5, 7

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: குரோதி வருடம் – ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை எப்படி?

Pagetamil

Leave a Comment