26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் சம்பவம்: சொகுசு பேருந்து கடைகளை இடித்து தள்ளியது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று (30) அதிகாலை பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து, அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னைய பரீட்சை பெறுபெற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு

east tamil

6ம் கட்டையில் முதலை

east tamil

மட்டக்களப்பில் மின்சாரத் தூணுடன் மோதிய வேக வேன்

east tamil

அறிவு ஒளி மையத்தின் அரிய செயல்

east tamil

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஊடக சந்திப்பு!

east tamil

Leave a Comment