ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய உண்மைகள் தெரிந்தால், அதனை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய தாம் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தரம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1