25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

சில்ஹெட் மைதானத்தில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓவர்களில் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் உள்ளது.

511 ஓட்டங்கள் என்ற சாத்தியமற்ற இலக்கை விரட்ட ஆரம்பித்துள்ள பங்களாதேஷ், 2 நாள் முழுவதுமாக எஞ்சியுள்ள நிலையில்,  தோல்வியடையவே வாய்ப்புள்ளது.

நாளை திங்கட்கிழமை மதியம் சில மழை முன்னறிவிப்பு உள்ளது, ஆனால் சில்ஹெட்டின் வானிலை கிரிக்கெட்டுக்கு சாதகமாக உள்ளது.

வழக்கம் போல, இலங்கை தரப்பில்  விஷ்வ பெர்னாண்டோவின் பந்தில் பங்களாதேஷ் வீரர்கள் திணறினர். அவர் 7 ஒவர்கள் வீசி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.  லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக இலங்கை 2வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய போது, கீழ் நடுவரிசை வீரர்கள் இலங்கையை தூக்கி நிறுத்தினார்கள்.  முதல் இன்னிங்ஸில் சதமடித்த தனஞ்ஜய டி சில்வா மற்றும் கமிந்து ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment