யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள வீடொன்று நேற்று (26) இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீப்பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, வீட்டிலிருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பணம் தீக்கிரையாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1