மோட்டார் சைக்கிளில் பயணித்து பல்வேறு பிரதேசங்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகிக்கும் திருமணமான தம்பதிகள் வெள்ளிக்கிழமை (16) கஹவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய, ஹகல, ஹங்கம இல.333 இல் வசிக்கும் 30 வயதுடைய ஹம்பராதுவ வல்கமகே ரசிக சம்பத் என்ற சந்தேகநபர் கஹவத்தை பொலிஸாரால் ஐந்து கிராம் 425 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அனுப்ப வேண்டிய இடங்களை தினமும் வாட்ஸ்அப் ஊடாக அறிவிக்கிறார். சந்தேகநபர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து பெல்மடுல்ல, பலாங்கொடை பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தல்காரரால் அறிவிக்கப்பட்ட இடங்களில் போதைப்பொருள் பொதிகளை வைத்துவிட்டுச் செல்கிறார். .
பின்னர் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை இயக்கும் நபருக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரால் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஹெரோயின் கடத்தியதற்காக சந்தேக நபரின் மனைவியான 25 வயதுடைய சத்துரிகா சண்டமாலியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் தினமும் 15,000 ரூபாய் பொதைப்பொருள் கடத்தல்காரரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.