இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபெந்திரா ரத்தோர் என்ற இளைஞன் வித்தியாசமான முறையில் மணமகள் தேடுகிறார்.
அவர் ஓட்டும் முச்சக்கர வண்டிக்குப் பின்னால் அவரது படத்தையும் விவரங்களையும் பகிர்ந்து, மணமகள் தேடுவது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக மணமகள் தேடுபவர்கள் தரகர்கள் வழியக அல்லது செய்தித்தாள் அல்லது வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கான இணையத்தளம் போன்றவற்றைப் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் 29 வயது தீபெந்திரா சற்று மாறுபட்டவர்.
திருமணம் செய்துகொள்ளத் தாம் விரும்புவதாகவும் தனக்காக பெண் தேட ஆள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இவர் தனது மின்சார முச்சக்கர வண்டியில் வைத்துள்ள திருமண அறிமுக பதாகையில் சாதி, மதக் கட்டுப்பாடு இல்லை, எந்த சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரிடம் திருமண யோசனையுடன் வரலாம் அல்லது அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் வரலாம் என்றார்.
பெண் தேடும் இந்த முயற்சியில் தனது பெற்றோருக்கும் சம்மதம் இருப்பதாக அவர் கூறினார். எனது தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், பெற்றோர் இருவரும் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். அதனால அவங்களுக்கு பொண்ணு தேட நேரமில்ல அதனால தான் நானே பெண் தேட ஆரம்பித்தேன் என்றார்.
தற்போது சொந்தமாக மின்சார முச்சக்கர வண்டி ஓட்டி தனது குடும்பத்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
தனது வாழ்க்கைத் துணையாக வரும் பெண்ணை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்கிறார். தீபேந்திரா வீட்டில் இளையவர் என்று கூறினார். அவருடைய மூத்த சகோதரனும் சகோதரியும் திருமணமானவர்கள். அந்த இளைஞன் படித்து, ஐடிஐ தேர்ச்சி பெற்றுள்ளதால், தனது தேடல் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.