Pagetamil
இலங்கை

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமா?: மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு, வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை (19) காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் தன் மீது சுட்ட போதும், மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்தார்.

எனினும், இந்த சம்பவத்தை யாரும் காணவில்லை. துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டது பற்றியும் மாறுபட்ட தகவல்கள் உள்ளன.

சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்து இரண்டு பழைய துப்பாக்கி ரவை வெற்றுக்கோதுகளும் மீட்கப்பட்டன.

சில வருடங்களின் முன்னர், இரட்டைக் கொலை சம்பவம் நடந்தது. இதனுடன் தொடர்புடைய ஒருவர் பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இரட்டை கொலை சந்தேகநபர்கள் தரப்பினரே தற்போது துப்பாக்கிச்சூட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும் இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப் பட்டும் அதையும் மீறி குறித்த சம்பவம் தொடர்வதாகவும்,இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில் ‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும்,பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment