27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

காசாளரான யுவதி மீது துப்பாக்கிச்சூடு: கொள்ளை!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று (12) காலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர், வர்த்தக நிலைய காசாளரான யுவதியை துப்பாக்கியல் சுட்டு, கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காசாளரான யுவயின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுடப்பட்டுள்ளார். யுவதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், கீழே இருந்த இருந்து பெட்டகத்தின் பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த யுவதியை சுட்டுள்ளனர்.

அதன் பின் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

திருடப்பட்ட பணம் குறித்த விபரம் இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த யுவதி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

இரவு நேர போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் தொடர் விசேட அறிவுறுத்தல்

east tamil

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்

east tamil

மின் வடங்கள் திருடப்படுவதை தடுக்க போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்

east tamil

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

Leave a Comment