ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்திருந்த போதிலும், சரத் பொன்சேகா உட்பட அதன் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியின் உரையின் போது பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, மேலும் பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை தனித்தனியாக பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளனர்.