அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.