அண்மையில் Verité Research நடத்திய ஆய்வின்படி, தெற்காசியாவில் இலங்கையிலேயே அதிக மின்சாரக் கட்டணம் அறவிப்படுவது தெரிய வந்துள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு அதிகம் என பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தெற்காசியாவில் பாகிஸ்தான் இரண்டாவது அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இலங்கையை விட கட்டணம் மிகக் குறைவு என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 100 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒரு வீடு செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணம் பாகிஸ்தானில் அதே எண்ணிக்கையிலான யூனிட்களைப் பயன்படுத்தும் வீட்டை விட 50 சதவீதம் அதிகம் என்றும், 300 யூனிட்களைப் பயன்படுத்தும் ஒரு வீடு செலுத்த வேண்டிய கட்டணம் 97 சதவீதம் அதிகம் என்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு வழங்கிய உறுதிப்பாட்டுடன் தொடர்புடையது என்று வெரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த மாதம் திட்டமிடப்பட்ட வரி குறைப்பின் கீழ், அது 4 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக வெரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையின் குடும்பங்கள் அதிகூடிய மின்சார கட்டணத்தை தொடர்ந்து எதிர்கொள்ளும் என வெரிட்டி ரிசர்ச் தெரிவித்துள்ளது.