மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்த சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ததுடன், இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு ரூபா (27,500) அபராதம் விதித்து, நுகேகொட மேலதிக நீதவான் சஞ்சய் லக்மால் விஜேசிங்க நேற்று முன்தினம் (06) உத்தரவிட்டார்.
284/22, திக்பிட்டிய, இரத்மலாவின்ன, பலாங்கொடையில் வசிக்கும் ராமுனி அப்பு சமந்த உதய குமார என்ற (54) நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் சுமேத விமல குணரத்ன உத்தியோகபூர்வ பணிக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கெஸ்பேவ பிடகுத்வவில் 120 வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து வெரஹெர மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதைக் கண்டார். பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேருந்தில் அமைதியற்ற சூழல் காணப்பட்டத.
பொலிஸ் பொறுப்பதிகாரி தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். பேருந்து சாரதியை இறக்கி விசாரித்ததில், அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தார்.
சாரதியை பரிசோதனையிட்டபோது, அவர் குடிபோதையில் இருந்தது உறுதியானது.
இதன்படி நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, மேலதிக நீதவான் சஞ்சய் லக்மால் விஜேசிங்க 27,500 ரூபா அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இடைநிறுத்தியுள்ளார்.