பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக நேற்று (07) ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் 42 சந்தேக நபர்களை பெலிஸ் கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 18 சந்தேக நபர்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலும், 5 பிக்பாக்கெட்காரர்களும் அடங்குவர்.
பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை நேற்று (07) முன்னெடுக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையிலும் அதிக முன்னுரிமை கொடுத்து சிவில் உடை அணிந்த பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.