யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1