மிஸ் யப்பான் 2024 அழகி, திருமணமான ஒருவருடன் உறவில் இருந்த விடயம் அம்பலமானதால், அவரது அழகி பட்டத்தை துறந்துள்ளார். இந்த ஆண்டு மிஸ் யப்பான் பட்டம் யாருக்கும் வழங்கப்படாமல் காலியாக இருக்கும் என அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டின் யப்பான் அழகியாக தெரிவானவர் 26 வயதான கரோலினா ஷினோ. இவர் ஜப்பானிய குடியுரிமை கொண்ட உக்ரைனில் பிறந்த அழகியாவார்.
இவர் திருமணமான வைத்தியர் ஒருவருடன் உறவில் இருப்பதாக பத்திரிகையொன்று வெளிப்படுத்தியது. இதையடுத்து எழுந்த சர்ச்சைகளையடுத்து, 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாளர் என்ற பட்டத்தை கைவிட்டார்.
திருமணமான வைத்தியருடன் தொடர்பிலிருக்கும் செய்தி வெளியானதும், அழகி ஷினோ அதை மறுத்தார். அவரது திருமண நிலை பற்றி தெரியாது என்றும் கூறினார். இதனை அழகி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் திங்களன்று, வைத்தியரின் திருமணம் பற்றி ஷினோவுக்குத் தெரியும் என்று ஒப்புக்கொண்டு, முதலில் அதை மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டது.
இதன் விளைவாக, ஷினோ மிஸ் ஜப்பான் பதவியிலிருந்து விலக முன்வந்தார். போட்டி அமைப்பாளர்கள் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவளித்த போதிலும், அவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து தனது பட்டத்தை கைவிட முடிவு செய்தார். தன் ஆதரவாளர்களுக்குத் துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.
மிஸ் ஜப்பான் விருது இந்த ஆண்டுக்கு காலியாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் யப்பானின் அழகி பட்டம் வென்ற முதல்நபர் முதல் நபர் ஷினோ. பட்டத்தை துறந்த முதல் வெற்றியாளரும் அவர்தான்.
ஷினோ உக்ரைனில் பிறந்தார். அவரது தாயார் ஒரு ஜப்பானிய நபரை மறுமணம் செய்து கொண்ட பிறகு 5 வயதில் ஜப்பானுக்கு குடிபெயர்ந்தார்.