25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூர்ய மற்றும் அசித பெர்ணான்டோ அகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மத்யூஸ் 141 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 107 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில், தனது இரண்டாது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கான் அணி முதல் விக்கெட்டை 104 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட்டை 214 ஓட்டங்களிலுமே இழந்தது. அடுத்த 82 ஓட்டங்களிற்குள் 8 விக்கெட்டை இழந்தது. முக்கியமாக சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூர்யா ஆப்கான் அணியை சுக்குநூறாக்கினார்.

அவர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அவ்வணி சார்பில் இப்ராஹிம் சத்ரான்114 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து 56 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலங்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்கயைும், நிஷான் மதுசங்க 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment