வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சயை, ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
குருந்துவத்தை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தெடர்பில், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையான சஞ்சயை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அமைச்சரின் மகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குருந்துவத்தை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வழக்கு தொடர்வதற்கு போதிய உண்மைகள் இல்லாத காரணத்தினால் தனது கட்சிக்காரரை விடுவிக்குமாறு சட்டத்தரணி ரசிக சஞ்சீவ நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான், முறைப்பாட்டில் சமல் சஞ்சீவ சந்தேக நபராக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்களை பதிவு செய்து முடித்து விட்டதாகவும் சமல் சஞ்சீவ சந்தேக நபராக பெயரிடப்பட உள்ளதாகவும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.பொலிசார் சந்தேக நபராக பெயரிட்டுள்ளதால் அவரை விடுவிக்க முடியாது என நீதவான் தெரிவித்தார். போலீசார் உரிய அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
சந்தேக நபர் அச்சுறுத்தல் அல்லது அவமானப்படுத்தும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்யவில்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியர் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சய் உள்ளிட்ட சிலர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டின் முன்னால் மலர்வளையம் வைத்து மிரட்டி அவமானப்படுத்தியதாக அமைச்சரின் மகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்யூனோகுளோபின் மருந்து இறக்குமதி மோசடிக்கு எதிராக மலர்வளையம் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.