26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
கிழக்கு

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதன் போது சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (12) எனும் மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன் லொறி செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னைய பரீட்சை பெறுபெற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு

east tamil

6ம் கட்டையில் முதலை

east tamil

மட்டக்களப்பில் மின்சாரத் தூணுடன் மோதிய வேக வேன்

east tamil

அறிவு ஒளி மையத்தின் அரிய செயல்

east tamil

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஊடக சந்திப்பு!

east tamil

Leave a Comment