Pagetamil
இலங்கை

போதைப்பொருள் பாவிப்பதெப்படி?- ரியூசனா வைக்க முடியும்?…. போதைப்பொருள் பாவிக்க தெரியாமல் யாழில் இளைஞன் மரணம்… அடுத்தடுத்து 3 வது மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளைஞன் அதிகளவான போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூற்றாய்வு பரிசோதனையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகமான ஹெரோயின் உட்கொண்டதால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் மீது திருட்டு, போதைப்பொருள் உள்ளிட்ட ஏராளமாக வழக்குகள் உள்ளன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், 26ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

சில மாதங்களாக சிறையில் ஹெரோயின் பாவிக்காமல் இருந்தவர், நேற்று மீண்டும் ஹெரோயின் விருந்துக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான ஹெரோயின் உட்கொண்டுள்ளார். சில காலம் ஹெரோயின் பாவிக்காமல் இருந்து விட்டு, திடீரென முன்னர் பாவித்தளவு ஹெரோயின் பாவிப்பது உயிரிழப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இளைஞனுக்கும் இதுதான் நடந்துள்ளது.

சிறைச்சாலையில் சில காலம் ஹெரோயின் பாவிக்காமல் இருந்து விட்டு, விடுதலையான பின்னர், முன்னர் பாவித்தளவு- அதிகமான அளவு- ஹெரோயினை முதற்தடவையாக உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தும். அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் இப்படியான 3 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதை தவிர்ப்பதற்காக ஹெரோயின் உட்கொள்வது பற்றிய தகவல்களை பேசாமல் விடப்படும் சூழலில், யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதை மரணங்கள்- போதைப்பொருளை எப்படி பாவிப்பது என்பது பற்றிய விளக்கத்தை வழங்க வேண்டிய நெருக்கடிக்குள் மருத்துவத்துறையை தள்ளியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment