அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1990களில் ஒரு கடையில் ட்ரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்திருந்தார்.
குற்றச்சாட்டை மறுத்த ட்ரம்ப் சமூக ஊடகங்களில் கேரலுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டார்.
தம்மை அவதூறு செய்ததாகக் கூறிய கேரல் ட்ரம்ப்பிடமிருந்து இழப்பீடு கோரினார்.
ஏற்கனவே கேரல் தொடுத்த மற்றொரு அவதூறு வழக்கில் ட்ரம்ப் 5 மில்லியன் டொலர் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கேரல் யார் என்று தெரியாது என்றும் அவர் வேண்டுமென்றே பொய் சொல்வதாகவும் கூறும் ட்ரம்ப் மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.
அவற்றின் தீர்ப்பு வெளியாவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர்.