வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
2002 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு தேர்வு முடிவுகளின்படி ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகத்தேர்வுகள் துரித கதியில் நடாத்தப்பட்டு அரச சேவைக்குள் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்களை www.moga.gov.lk என்ற உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பார்வையிடலாம்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1