24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

விஸ்வ புத்தாவுக்கு பிணை

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி  “விஸ்வ புத்தா”வை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் தொடர முடியாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த சந்தேகநபரை குற்றவியல் சட்டத்தின் 290வது பிரிவின் கீழ் விசாரணை செய்ய முடியும் என நீதவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரான “விஸ்வ புத்தா” வை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை மார்ச் 27ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

Leave a Comment