அண்மைய மூன்று நாள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அமைச்சர் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் தீவிரமாக பங்கேற்ற ஊழியர்களின் பணி இடைநிறுத்தமும் இதில் அடங்கும்.
தொழிற்சங்க நடவடிக்கையானது முதன்மையாக அரசுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பாக கவலையும் தெரிவித்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1