30.6 C
Jaffna
April 6, 2025
Pagetamil
கிழக்கு

காயான்கேணியில் மினி சூறாவளி

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரை பிரதேசத்தில் இன்று (6) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக படகுகள் சில சேதமடைந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை வேகமான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரையோரப் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் 06 படகுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு படகு அதன் இயந்திரம் போன்றன பெருமளவு சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனையவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் ஓலைக் கொட்டில் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசைகள் என்பன சேதமடைந்து காணப்படுகிறன. சேதமடைந்த தங்களது படகினை திருத்தம் செய்து மீள பாவிப்பதற்கு தங்களிடம் போதியளவு பணமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அச்சம் காரணமாக மீனவர்கள் இன்று அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லவில்லை.

சம்பவம் பற்றி வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-க.ருத்திரன்-

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!