27.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

வடக்கு ஆளுனர் அலுவலகத்தின் மோசமான செயற்பாடு: விமர்சனத்தை மிரட்டி அடக்கும் முயற்சியா?

ஊடகவியலாளர் வர்ணன் தனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு ஆளுநர் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு இன்று சனிக்கிழமை குறித்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

வாக்கமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் பொலிசாரால் வழங்கிய அழைப்புக் கடிதத்தில் முறைப்பாடு என்ன என்பதும் முறைபாட்டாளர் யார் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவில்லை.

வாக்குமூலம் வழங்குவற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட கடிதப் பிரதியை பொலிசார் எனக்கு காண்பித்தனர்.

எனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு மற்றும் வடக்கு ஆளுநரின் செயற்பாடுகளை ஒப்பிட்டு எழுதிய பதிவை ஆளுநரின் செயலாளர் வடமாகாண பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டுக்காக வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் என்னிடம் வாக்குமூலத்தை கேட்ட நிலையில் கருத்தை சுதந்திரம் அடிப்படை உரிமை ஒரு ஊடகவியளார் என்ற நீதியில் வடக்கு ஆளுநரினால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை கிழக்கு ஆளுநரை ஒப்பிடும் அளவில் போதாது என்ற விடயத்தை கூறினேன்.

எனது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்தம் நோக்கிலும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த நோக்கிலும் ஆளுநரின் செயலாளர் செயற்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Pagetamil

15 வயது மாணவி கூட்டாக சீரழிப்பு: 7 பேர் கைது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!