நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர்.
சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார்.
பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
நாளைய தினம் மொத்தமாக 1004 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1