25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
சினிமா

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம்: சீரியல் நடிகையை கரம்பிடித்தார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஜெயிலர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தில் இவரது நகைச்சுவை வசனங்கள் பெரும் பிரபலமாகின.

இந்த நிலையில், சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு நேற்று (டிச. 10) சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சங்கீதா ஒரு சில தொலைகாட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் இவரை கணிசமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment