Pagetamil
கிழக்கு

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம்: பெண் மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த நாராயண ஆனந்ததேவன் தர்சாத் எனும் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 28 வயதான அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சனிக்கிழமை (2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

-கல்முனை நிருபர்-

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!