கல்முனைப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுவனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுவர் இல்லத்தின் 28 வயதுடைய காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஏ.டி.தர்ஷன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குறித்த சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்முனை பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் பிடிவாதத்தை அடக்குவதற்காகவே சிறுவனை கட்டைகளால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1