பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு அருகில் சனிக்கிழமை அன்று இலங்கை நேரப்படி இரவு 08:07 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனை ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) உறுதி செய்துள்ளது.
EMSC அறிக்கையின்படி, நில அதிர்வு நிகழ்வு 63 கிமீ (39 மைல்) ஆழத்தில் நிகழ்ந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு உடனடியாக சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (டிசம்பர் 2) பிற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தெற்கு தீவான மின்டானோவில், 6.4 ரிக்டர் அளவுகோலில் ஒன்று உட்பட அடுத்தடுத்து பின்அதிர்வுகள் ஏற்பட்டன. நில அதிர்வு செயல்பாடு பாதிக்கப்பட்ட பகுதியில் கவலைகள் மற்றும் விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது, மேலும் ஏதேனும் முன்னேற்றங்களுக்கு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான உள் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகிறது. இந்த நிலநடுக்கம் சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் உணரப்பட்டதாகவும், சக்தி வாய்ந்தது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, மேடான பகுதிகளுக்கு சென்றதாகவும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.