26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா

6 வயது குழந்தை கடத்தல் விவகாரம்: பிரபல யூடியூப்பர் அனுபமாவும், பெற்றோரும் கைது!

கேரளாவின் கொல்லத்தில் 6 வயது குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மகளை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சாத்தன்னூரைச் சேர்ந்த K R பத்மகுமார் (52), அவரது மனைவி M R அனிதாகுமாரி (45) மற்றும் மகள் அனுபமா (20) ஆகிய 3 பேரும் போலீஸ் காவலில் உள்ளனர்.

நவம்பர் 27ஆம் திகதி கடத்தப்பட்ட ஆறு வயது சிறுமி, பொலிஸ் காவலில் இருந்த நபரை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பூயப்பள்ளி காவல் துறையினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று கைது செய்யப்பட்ட 3 பேரின் புகைப்படங்களைக் காண்பித்தனர். அந்த மூவரையும் தான் பார்த்ததில்லை என்று குழந்தை போலீசாரிடம் கூறிய போதும், பின்னர் பத்மகுமாரை அடையாளம் கண்டுகொண்டதாக தெரிய வந்துள்ளது. சிறுமியை கண்டுபிடிப்பதற்காக விசாரணை குழுவினர் வெளியிட்ட ஓவியமும் பத்மகுமாருடன் ஒத்துப்போனது.

விசாரணைக் குழு தற்போது அடூர் கேஏபி முகாமில் உள்ள குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றத்தில் தனது மனைவிக்கும் மகளுக்கும் தொடர்பு இல்லை என்று பத்மகுமார் மறுத்ததாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

பத்மகுமார் கேபிள் டிவி தொடர்பான வேலைகள் மற்றும் பேக்கரி, பண்ணை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அவரது அக்கம்பக்கத்தினர்  தெரிவித்தனர்.

கொல்லம் நகர போலீஸ் கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளிடமிருந்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். ஆறு வயது சிறுமியின் தந்தையுடன் ஏற்பட்ட நிதி தகராறு கடத்தலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்மகுமார் மற்றும் அவரது கும்பலால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தை, நீல நிற காரில் ஒரு பெரிய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரிடம் கூறினார். சாத்தன்னூரில் உள்ள பத்மகுமார் வீட்டுக்கு குழந்தையை கும்பல் அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியின் கூற்றை உறுதிப்படுத்திய அக்கம்பக்கத்தினர், பத்மகுமார் நீல நிற காரில் பயணிப்பதாகவும், அவரது வீட்டில் இரண்டு நாய்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர். ஓயூரில் இருந்து சிறுமி கடத்தப்பட்ட வெள்ளை நிற கார் அவருக்கு சொந்தமானது என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். இரண்டு கார்களும் பத்மகுமார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பத்மகுமாரின்  குடும்பத்தில் சில நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மொபைல் டவர் இருப்பிடத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் விசாரணைக் குழு கண்டுபிடித்தனர். தென்காசி புளியரையில் உள்ள உணவகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரிகிறது.

நவம்பர் 27ஆம் தேதி கொல்லம் ஓயூரில் இருந்து தனது சகோதரனுடன் டியூஷன் சென்டருக்குச் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளை நிற காரில் குழந்தையை கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட சுமார் 21 மணி நேரத்திற்குப் பிறகு அவர் மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தாதியர் ஆட்சேர்ப்பு தொடர்பான மோசடியில் சிறுமியின் தந்தை ரெஜி ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரெஜி குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் சாத்தன்னூரைச் சேர்ந்த யாருடனும் தான் தொடர்பு கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தினார்.

பிரபல யூடியூப்பர்

கைது செய்யப்பட்டுள்ள பத்மகுமாரின் மகளான அனுபமாவின் சமூக ஊடகங்களை 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

அனுபமா பத்மன் ஒரு நடனக் கலைஞர் மற்றும் யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இதுவரை, 381 வீடியோக்கள் அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன. அனைத்து வீடியோக்களும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன,

அவரது பெரும்பாலான வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது, சில 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளன. விலங்கு காதலரான அனுபமா, கடந்த ஒக்டோபர் மாதம் தனது வீடியோவை வெளியிட்டார். தெருநாய்களை கவனித்துக் கொள்ளும் அனுபமா, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை வீட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். சமீப காலங்களில், நிதிப் பிரச்சினை குறித்து தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தெரிவித்த அவர், அனைத்து நாய்களையும் கவனித்துக் கொள்ள உதவி கேட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment