25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
சினிமா

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கிறார் சமந்தா?

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் இருந்து தற்போது விலகியிருக்கும் சமந்தா வெளிநாடுகளுக்குச் சென்றும் சிகிச்சை பெற்றார். இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை அவர் தத்தெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக 2021இல் அவரைப் பிரிந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment