26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

பிரபல பாடகி இசை நிகழ்ச்சியில் நெரிசல்: கேரள பல்கலையில் 4 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 1 மாணவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை ஒட்டி நேற்றிரவு இசைக் கச்சேரி நடைபெற்றது.

பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்று இசைக் கச்சேரியை நடத்தினார். திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இசைக் கச்சேரியை ரசிக்க ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். வெளியாட்களும் வந்திருந்தனர்.

அங்கு 3,000 மணவர்கள் குவிந்திருந்தனர்.

இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்ததால் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு அரங்கத்துக்குள் நுழைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், ஒரு மாணவர், ஒரு வெளியாள் ஆகியோர் உயிரிழன்ர்.

மாணவ, மாணவியர் உள்ளிட்ட 72 பேர்  படுகாயம் அடைந்தனர்.அவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனறு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment