நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த ஹீட்டர் சிஸ்டம் திடீரென பழுதடைந்ததால் செயலிழந்துள்ளதாகவும், அதனை சீர்செய்வதற்கான அடிப்படை பணிகளை ஊழியர்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரின் பிரதான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து அதன் சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த மூன்றாவது ஜெனரேட்டரை மிக விரைவில் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் காரணங்களால் மின்சார விநியோகம் தடைபடாது என்றும், இந்த பராமரிப்புக் காலத்தில் நீர்மின்சார உற்பத்தி அதிகபட்சமாக மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பராமரிப்பு பணிகளுக்காக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் ஆறு வாரங்களுக்கு மூடப்படும் என மின்சார சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எரிவாயு மற்றும் நீராவி விசையாழிகள் பராமரிப்பு நோக்கங்களுக்காக மூடப்படும்.