26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
சினிமா

நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை

போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. 17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்தனர்.

இதனையடுத்து, தனுஷின் வீட்டுக்குச் சென்ற போக்குவரத்து போலீஸார், தனுஷின் மகனுக்கு ரூ.1000 அபராதம் அபராதம் விதித்தனர். இந்த விவகாரத்தில் தனுஷின் மகன் அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே பைக் ஓட்டக் கற்றுக் கொள்வது தவறா என்று அவருக்கு ஆதரவாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment