26 C
Jaffna
December 31, 2024
Pagetamil
இலங்கை

யாழில் பாடசாலை அதிபருக்கு தவறான அறிவுரை வழங்கிய பெற்றோர்!

அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என பல தரப்பும் வலியுறுத்தி வரும் நிலையில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரது இடமாற்ற விவகாரத்தில் தவறான முன்மொழிவை பாடசாலை பெற்றோர்கள் என கூறப்படும் ஒரு தரப்பினர் முன்மொழிந்துள்ளனர்.

ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்காக ஆளுநர், அமைச்சர் ஆகியோரை நாடுமாறு அதிபரிடம் கோரியுள்ளனர்.

கையளிக்கப்பட்ட மகஜரில், எமது கல்லூரியில் 55 வயதைக் கடந்து கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே. 55 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கு சட்டப்படி இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

இவர்கள் இருவரும் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கையில் அக்கறையுடைய ஆசிரியர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருந்து செயற்படும் இவர்கள் கட்டாயம் எமது பாடசாலையில் சேவையாற்ற வேண்டியவர்கள். ஆனாலும் அவர்களது இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தீரவில்லை. இவ்விடயம் தொடர்பாக பாடசாலைச் சமூகம் பல நடவடிக்கைகளைச் செய்தது. வடமாகாண ஆளுநரின் சிபார்சுக்கு அமைவாக இந்த இடமாற்றம் பிற்போடப்பட்டிருந்தமையை அறிந்தோம்.

மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சினை தோன்றியுள்ளது. இந்நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு அமைச்சரான கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவை நாடியிருந்தது. இன்னும் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. இப்பிரச்சினையை அமைச்சர் அவர்களே தீர்த்துவைப்பார்.

எனவே, அதிபர் ஆகிய நீங்கள் இந்த இடமாற்றத்தை மீண்டும் இரத்துச் செய்து நல்லதொரு தீர்வைப் பெற்றக்கொள்வதற்காக ஆளுநர், அமைச்சர் ஆகியோரை மீண்டும் நாடி விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பெற்றோர்களாகிய நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

இடமாற்றத்தை நாட அரசியல் பிரமுகர்களிடம் செல்லுமாறு பாடசாலைக்கு பெற்றோர் அறிவுரை கூறுவது, ஊழல்மிக்க அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான அறிவுரையென பல தரப்பினரம் சுட்டிக்காட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment