நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50மி.மீ.க்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1