உஹன கலபிடகல 32 வது கொலனியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், தொல்பொருட்களைத் தேடும் நோக்கத்திற்காக வீடொன்றின் பின்புறம் நிலத்தை தோண்டியதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலத்தை தோண்டுவதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அலவாங்கு, மண்வெட்டி, டெட்டனேட்டர், தண்ணீர் மோட்டார் மற்றும் அவர்கள் வந்த மிட்சுபிஷி ஜீப் ஆகியவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொல்கஹவெல பிரதேசத்தில் வசிக்கும் 48, 38 மற்றும் 24 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
உஹன பொலிஸ் விஷேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், 15ஆம் திகதி பொலிசார் சோதனையிட்டபோது, சந்தேக நபர்கள் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் ஏற்கனவே 12 அடி ஆழத்திற்கு தோண்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1