கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவுக்கு எதிரான மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த மனுவை பரிசீலிப்பதற்காக டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நீதிபதிகள் முன்பு இது தொடர்பான மனு வரும் 16ம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பான மனு விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார்.
இந்த மனு இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இதனை அறிவித்தார்.
பின்னர் இந்த மனு விசாரணைக்கு மற்றுமொரு நீதியரசர்கள் குழாமாக- சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த குழுவில் இருந்த தம்மிக்க கணேபொல தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவை பரிசீலிக்க டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.