இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடு முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.